ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு

மலாக்கா, ஜூலை 30-

சமயப் பள்ளி ஒன்றில் 12 வயது மாணவி ஒருவரை கட்டியணைத்து, ஆபாச சேட்டைப் புரிந்ததாக சமயப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

25 வயதுமுஹாஹத் ஃபக்ருர்ரை அப்துல் ரஸீத் என்ற அந்த ஆசிரியர் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் மலாக்கா, தாமன் புன்ஜாக் புக்கிட் கட்டில், மதரஸா பரோக்கா குரான் மையம் -லில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் சிறை மற்றும் பிரம்படித்தண்டனை விதிக்க வகை செய்யும் 2017 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் அந்த ஆசிரியர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS