மாலத்தீவில் இரண்டு மலேசியர்கள் கைது

நியூ டெல்லி, ஜூலை 30-

இந்தியப் பெருங்கடலில் தீவு நாடான மாலத்தீவில் 37 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருளை கடத்த முயற்சி செய்த இரண்டு மலேசியர்கள், அந்த நாட்டின் ட் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருப்பதை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் இன்று உறுதி செய்தது.

இவ்விவகாரம் தொடர்பாக மாலத்தீவு நாட்டின் போலீசாருடன் தாங்கள் தொடர்பு கொண்டு இருப்பதாக புக்கிட் அமான் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவின் இயக்குநர் டத்தோ செரி காவ் கோக் சின் தெரிவித்தார்.

அந்த இரு மலேசியர்கள் பற்றிய முழு விபரங்களை அந்நாட்டு போலீசார் விரைவில் வழங்குவார்கள் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS