குற்றச்சசாட்டை மறுத்தது போலீஸ் துறை

பசீர் குடாங், ஜூலை 30-

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும், ஜோகூர், மாசாய் வட்டாரத்தில் ஓர் எண்ணெய் நிலையத்தில் சிறுவன் ஒருவனை கடத்தும் முயற்சி நடைபெற்றதாக கூறப்படுவதை செரி ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் முகமது சொஹைமி இஷாக் மறுத்துள்ளார்.

இது ஏற்கனவே போலீசாரால் மறுக்கப்பட்ட ஒரு பழைய விவகாரமாகும். இருந்த போதிலும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதைப் போன்று அந்த எண்ணெய் நிலையத்தில் சிறுவர் யாரும் கடத்தப்படும் முயற்சி நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக முகமது சொஹைமி இஷாக் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS