அம்பாங் , ஜூலை 30-
இந்தோனேசியப் பணிப்பெண் ஒருவரை வர்த்தக நோக்கில் பயன்படுத்திக்கொண்டது மற்றும் பத்து ஆண்டுகளுக்கு பெர்மின்றி வேலைக்கு அமர்த்திக்கொண்டது ஆகிய குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியிருந்த இரண்டு உள்ளூர் பெண்களை எதிர்வாதம் புரியும்படி அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
56 வயது Ong Su Ping மற்றும் 53 வயது சங் யோக் லெங் என்ற இரு பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரங்கள் இருப்பதை பிராகியூஷன் தரப்பு நிரூப்பித்துள்ளதாக நீதிபதி வான் முகமது நோரிஷாம் வான் யாக்கோப் தெரிவித்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு பாண்டன் ஜெயா, பெர்சியரான் பாண்டன் 7 என்ற இடத்தில் ஓர் இந்தோனேசியப் பணிப் பெண்ணான 32 வயது மெரியன்ஸ் கபு என்பவரை அடித்து துன்புறுத்தி, வர்த்தக நோக்கத்திற்கு பயன்படுத்திக் கொண்டதாக அந்த இரு பெண்களுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.