சாக்கடை குழிக்குள் சிக்கிய இருவர மரணம்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 30-

சுமார் 4.5 மீட்டர் ஆழமுள்ள சாக்கடைக்குழியில் விஷ வாயு தாக்கி இரு ஆடவர்கள் மரணம் அடைந்தனர். இச்சம்பவம் இன்று காலை 9.20 மணியளவில் கெடா, ஜித்ரா அருகில் பாயா கெமுண்டிங் தேசிய இடைநிலைப்பள்ளியின் முன்புறம் நிகழ்ந்தது.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்து ஸ்தலத்திற்கு விரைந்த தீயணைப்பு,மீட்புப்படை வீரர்கள், அந்த சாக்கடைக்குழியை ஆராய்ந்த போது அதில் விஷ வாயு சுழற்சி இருப்பதை கண்டு பிடித்தனர்.

பின்னர் வாயு கலன்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களைப் பொருத்திக்கொண்டு, அந்த சாக்கடைக்குள் இறங்கி சோதனை செய்த போது, இரு ஆடவர்கள் சுயநினைவின்றி கிடப்பதை கண்டு பிடித்தனர்.

27 மற்றும் 31 வயதுடைய அவ்விருவரின் உடல்களையும் மீட்கும் நடவடிக்கை மதியம் 12.32 வரை நிறைவு பெற்றது. அவர்கள் மரணம் அடைந்து விட்டதை சுகாதார அதிகாரிகள் உறுதி செய்தனர்.

WATCH OUR LATEST NEWS