மாதுவும், காதலனும் குற்றஞ்சாட்டப்பட்டனர்

பொண்டியன்வ் ஜூலை 30-

தனது கணவரை மிரட்டியதாக கூறப்படும் மாதுவும், அவரின் காதலனும் ஜோகூர்,பொண்டியன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

32 வயது சியுஸ்ஸானா யஹாயா என்ற மாதுவும் அவரின் காதலான 42 வயது முகமது ஃபியர்டஸ் ஒஸ்மான் என்பவரும் மாஜிஸ்திரேட் நூர் அஸ்ஜுயின் அப்துல் மோதி முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

தனது காதலுடன் கூட்டு சேர்ந்த அந்த மாது, தனது கணவரான 41 வயது ஜகாரியா முகமது நூஹ் என்பவரிடம் பணம் கேட்டு அச்சுறுத்தியுள்ளதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

அவ்விருவரும் கடந்த ஜுலை 26 ஆம் தேதி நள்ளிரவில் பொண்டியன், பெகன் நானாஸ், ஜாலான் ஜோகூர், பத்து 30, கம்போங் ஜசா செபகாட்- டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

WATCH OUR LATEST NEWS