இருமல் மருந்து சுவை கொண்ட ஐஸ்கிரீம் விற்பனைக்கு தடை

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 30-

பாரம்பரிய இருமல் மருந்தை மூலப்பொருளாக பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களின் விற்பனையை நிறுத்துமாறு உள்ளூர் ஐஸ்கிரீம் நிறுவனத்திற்கு சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

பிரபல ஐஸ்கிரீம் சங்கிலித் தொடர்பு நிறுவனமான Inside Scoop, / Pei Pa Koa எனும் சின்னத்தை தாங்கிய தாய், சேய் இருமல் நிவாரண மருந்தை பயன்படுத்தி, தயாரித்த புதிய சுவையைத் தாங்கிய ஐஸ் கிரீம் வகைகளை இவ்வாரத்தில் அறிமுகப்படுத்தியப் பின்னர் சுகாதார அமைச்சு இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Pei Pa Koa இருமல் மருந்து, 1983 ஆம் ஆண்டு உணவு சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்பட்ட மருந்துப் பொருளாகும். அந்த மருந்தை இதர வகை உணவுகளில் மூலப்பொருளாக கலப்பதற்கு நடப்பு சட்டம் தடை செய்வதாக சுகாதார அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS