சுபாங் , ஜூலை 30-
கடந்த நான்கு ஆண்டு காலமாக பயணிகளுக்கான விமானச் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுபாங், சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையம் , வரும் ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து மீண்டும் செயல்படவிருக்கிறது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
சுபாங் விமான நிலையம் மீண்டும் செயல்படுவது மூலம் அந்த விமான நிலையத்தின் வசதிகளை 6 முன்னணி விமான நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.
Firefly, AirAsia Malaysia, Batik Air Malaysia, Transnusa, SKS Airways மற்றும் Scoot ஆகிய 6 விமான நிறுவனங்கள் அன்றாடம் 9 விமானச் சேவைகளை மேற்கொள்ளும். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு விமானம் சேவையில் ஈடுபடும் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.
முன்னதான சுபாங் விமான நிலையத்திற்கு வருகை புரிந்த அமைச்சர் அந்தோணி லோக், அங்கு நடைபெற்று வரும் சீரமைப்புப்பணிகளை பார்வையிட்டார்.