பாங்காக், ஜூலை 30-
மலேசிய – தாய்லாந்து எல்லைப் பாதுகாப்பு மற்றும் இரட்டை குடியுரிமை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் -, மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்திக்கவிருக்கிறார்.
இவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தாய்லாந்து எல்லைப்பகுதியான தென் பிரதேசத்தில் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக தென் பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு ஏஜென்சியை நாளை புதன்கிழமை தாம் சந்திக்கவிருப்பதாக தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தாய்லாந்து பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.