கோலாலம்பூர், ஜூலை 30-
அரச மலேசிய போலீஸ் படையினருடன் இணைந்து சமூகத்திற்கு ஆக்கப்பூர்வமான மற்றும் துல்லியமான செய்திகள் கொண்டு சேர்க்கப்படுவதற்கு ஊடகவியலாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமாகும் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.
அதேவேளையில் எந்தவொரு செய்தியையும் சமூகத்திற்கு கொண்டு சேர்க்கப்படுவதற்கு முன்னதாக அவற்றின் அனைத்து தகவல்களும் சரியாகவும், துல்லியமாகவும் இருக்கின்றனவா? என்பதை உறுதி செய்து கொள்வது ஊடகவியலாளர்களின் தார்மீக கடமையாக இருக்க வேண்டும் என்று டத்தோ ருஸ்டி வலியுறுத்தினார்.
சமூகத்தின் மத்தியில் தவறான வியாக்கியாணம் ஏற்படாமல் இருப்பதற்கு இது முக்கியமாகும் என்று அவர் ஊடகவியலளார்களை கேட்டுக்கொண்டார்.
இன்று செவ்யாய்கிழமை கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் ஊடகவியலாளர்களுடன் போலீஸ் அதிகாரிகள் நடத்திய சந்திப்பு நிகழ்வில் உரையாற்றுகையில் டத்தோ ருஸ்டி இதனை தெரிவித்தார்.