செரம்பன், ஜூலை 30-
பள்ளிகளுக்கு நிதி திரட்டும் நடவடிக்கைகள் தொடர்பில்
நடப்பு வழிகாட்டி முறையை நிலைநிறுத்தியிருக்கும் அமைச்சரவையின் முடிவிற்கு அனைத்து தரப்பினரும் மதிப்பளித்து, இவ்விவகாரம் மீதான சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் கேட்டுக்கொண்டார்.
மதுபான நிறுவனங்கள் வழங்கக்கூடிய நிதியை பெறுவதற்கு தடைவிதிக்க வகைசெய்யும் நடப்பு வழிகாட்டல் முறை குறித்து அமைச்சரவை தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவித்து விட்டது. இது போதுமானதாகும். எனவே இவ்விவகாரத்தை நீட்டிக்க வேண்டும் என்று தாம் எண்ணவில்லை என்று ஃபத்லினா சிடெக் குறிப்பிட்டார்.
அமைச்சவையின் முடிவு அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதாகும். இவ்விவகாரத்தை தொடராமல் இத்துடன் நிறுத்திக்கொள்வது நல்லது என்று சிரம்பான், துவாங்கு முஹ்ரிஸ் ஆறாம் படிவ கல்லூரியின் பெயர் சூட்டும் விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.