அரசாங்கம் மிக சர்வாதிகாரமாக செயல்படுகிறதா? / அம்பிகாவின் குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ள முடியாது

கோலாலம்பூர், ஜூலை 30-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் இதுவரை இல்லாத அளவிற்கு மிக சர்வாதிகாரமாக செயல்படுவதாக மனித உரிமைப் போராட்டவாதி அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறியுள்ள குற்றச்சாட்டை அறவே ஏற்றுக்கொள்ள முடியாது என்று பசீர் குடாங் எம்.பி. ஹசன் அப்துல் கரீம் தெரிவித்துள்ளார்.

பெர்சே இயக்கத்தின் முன்னாள் தலைவர் / மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் என்ற முறையில் அம்பிகாவை தாம் மதிப்பதாக ஹசான் கரீம் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அரசாங்கம் மிக சர்வாதிகாரமாக செயல்படுகிறது என்று கண்மூடித்தனமாக குற்றச்சாட்டை முன்வைக்கக்கூடாது என்று ஒரு சட்ட வல்லுநரான ஹசான் கரீம், மனித உரிமைப் போராட்டவாதி அம்பிகாவை கேட்டுக்கொண்டார்.

சமூக ஊடக நடத்துனர்கள் , அதற்கான உரிமத்தை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைக்கு அம்பிகா கடும் எதிர்ப்பை தெரிவித்து இருப்பது தொடர்பில் ஹசான் கரீம் எதிர்வினையாற்றியுள்ளார்.

வெளிநாடுகளை தளமாக கொண்டுள்ள சமூக ஊடக நிறுவனங்கள், மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணைய சட்டத்தின் கீழ் கட்டாயம் உரிமைத்தை பெற்றிருக்க வேண்டும் என்று அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய பரிந்துரையை அம்பிக்கா எதிர்க்கலாம். வாதிடலாம், சர்சை செய்யலாம்.

ஆனால், அரசாங்கத்தின் அந்த புதிய விதிமுறை அமலாக்கமானது, சர்வாதிகாரப் போக்கைக் கொண்டுள்ளது என்றும் / இதுவரையில் மலேசியா கொண்டிருக்காத அதிகப்படியான சர்வாதிகாரப் போக்கு என்றும் / அம்பிகா சாடியிருப்பது ஏற்புடையது அல்ல, எந்த வகையிலும் நியாயமும் இல்லை என்று அந்த PKR எம்.பி. இன்று வாதிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS