கோலாலம்பூர், ஜூலை 31-
பழைய பாணியிலான பகடிவதைகள் தற்போது, காலசூழலுக்கு ஏற்ப இணைய பகடிவதைகளாக மாறிவிட்டதால், பணியிடங்களில், இணையப் பகடிவதை தடுப்பு கொள்கையை முதலாளிமார்கள் ஆக்கப்பூர்வமான முறையில் கையாள வேண்டும் என மலேசிய முதலாளிகள் சம்மேளனம் – MEF தலைவர் டத்தோ டாக்டர் சையத் ஹுசைன் சையத் ஹுஸ்மான் வலியுறுத்தினார்.
தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பாதுகாப்பான பணியிட சூழலை ஏற்படுத்தி தருவது மிக முக்கியம் என கூறிய அவர், இணையப் பகடிவதைகளில் ஈடுபடுவோரை, நிர்வாகிகள், மேற்பார்வையாளர்கள் முதலானோர், அணுக்கமாக கண்காணிக்க வேண்டும் என்றார்.
இணையப் பகடிவதைகள், பாலியல் துன்புறுத்தலாக மாறும் பட்சத்தில், நிறுவனங்கள் அவற்றின் நிறுவன கொள்கைக்கும் சட்டத்திற்கும் ஏற்ப, உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என டாக்டர் சையத் ஹுசைன் ஆலோசனை விடுத்தார்.