சிங்கப்பூர், ஜூலை 31-
சிறார்களுக்கும் குடும்பங்களுக்கும் இணையம் பாதுகாப்பானதாக உள்ளதை கண்காணிப்பதற்காக, அடுத்தாண்டு அமல்படுத்தப்படவிருக்கும் உரிமத்தை பெறும் புதிய விதிமுறைக்கு, சமூக ஊடக நடத்துனர்கள் சாதகமான பதிலை அளித்துள்ளதாக, தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் தாம் மேற்கொண்ட 3 நாள்கள் அலுவல் பயணத்தில், META, GOOGLE, TIKTOK, TENCENT ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து, சம்பந்தப்பட்ட விதிமுறை குறித்து விளக்கம் அளித்த போது, அந்நிறுவனங்கள் அவற்றை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், மலேசியா தங்களுக்கு முக்கியமான சந்தையாக விளங்குவதை ஒப்புக்கொண்ட அந்நிறுவனங்கள், மலேசிய அரசாங்கத்தின் முடிவுக்கு இணங்க தயாராக இருப்பதாகவும் கூறியதாக, ஃபாஹ்மி குறிப்பிட்டார்.