பெட்டாலிங் ஜெயா, ஜூலை 31-
அம்னோ-விலிருந்து விலகி பாஸ் கட்சியில் இணைந்துள்ளதாக கூறப்படும் ரெம்பியா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முஹம்மது ஜெய்லானி காமிஸ், அது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் கடிதம் அளிக்க, வருகின்ற வெள்ளிக்கிழமை வரையில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற சந்திப்பில், அவரிடம் தாம் அக்கடிதத்தைக் கோரி, இரு வார கால அவகாசம் வழங்கியிருந்ததாக, மலாக்கா சட்டமன்ற தலைவர் டத்தோ வீரா இப்ராஹிம் துரும் தெரிவித்தார்.
அடுத்த மாதம் ஆகஸ்ட் 8ஆம் தேதி, ஜெய்லானி ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பியதும், அவரது நிலை குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் இப்ராஹிம் கூறினார்.