காஜாங், ஜூலை 31-
பெண் ஒருவரை தாக்கியதுடன், அபாயகரமாக வாகனத்தை செலுத்தி, மற்ற வாகனங்களை மோதித்தள்ளியதாக நம்பப்படும் இரண்டு ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, காஜாங், பத்து 9 சேரஸ் அருகில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் தேடப்பட்டு வந்த அவ்விரு நபர்களும் இன்று காலை 4 மணியளவில் காஜாங் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.
25 மற்றும் 26 வயதுடைய அந்த இரு ஆடவர்களுக்கும் போதைப்பொருள் குற்றவியல் சம்பவங்கள் தொடர்பில் முறையே 12 மற்றும் 22 குற்றச்செயல்களுக்கு ஆளானதாக அவர் குறிப்பிட்டார்.
விசாரணைக்கு ஏதுவாக அவ்விருவரையும் 6 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.