கோலாலம்பூர், ஜூலை 31-
இன்று ஜுலை 31 ஆம் தேதி வீரர்கள் தினத்தை முன்னிட்டு ஆயுதப்படைக்கும், அரச மலேசிய போலீஸ் படைக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
தாய் நாட்டை பாதுகாப்பதற்கு தன்னலமற்ற சேவையையும், அர்ப்பணிப்பையும் வழங்கி வரும் இவ்விரு படையினரின் தியாகங்கள் என்னென்றும் நினைவுகூரப்படும் என்று பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தாயகம், சமயம், இனம் ஆகியவற்றை முன்னிறுத்தி போராடி வரும் பாதுகாப்பு படையினருக்கு அரசாங்கம் சார்பில் நன்றியை தெவித்துக்கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.