தெஹ்ரான்,ஜூலை 31-
ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹனியே கொல்லப்பட்டதாகக் அந்த அமைப்பு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை ஈரானின் புதிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின்னர் ஹனியே கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சம்பவத்திற்கான” காரணம் உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் “விசாரணை செய்யப்பட்டு வருகிறது” என்று ஈரானிய புரட்சிகர காவல்படை கூறியதாக ஏஃபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீனத்தின் காசா முனையை ஆட்சி செய்யும் இஸ்மாயில் ஹனியே தலைமையிலான ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பணய கைதிகளாக காசாவிற்கு கடத்தி செல்லப்பட்டனர்.