கிள்ளான், ஜூலை 31-
பத்து ஆண்டுகளுக்கு முன்பு லோரியினால் மோதப்பட்டு,கடும் காயங்களுக்கு ஆளான பெண் ஒருவர், காப்புறுதி நிறுவனத்திற்கு எதிராக தொடுத்த வழக்கில் இன்று வெற்றி பெற்றார்.
கையில் கடும் பாதிப்புக்கு ஆளான 22 வயது M . சாரண்யா என்ற பெண்ணுக்கு 71 லட்சம் வெள்ளியை இழப்பீடாக வழங்கும்படி கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றம் அந்த காப்புறுதி நிறுவனத்தற்கு உத்தரவிட்டது.
சம்பந்தப்பட்ட பெண்ணின் இடது கையில் ஏற்பட்ட பாதிப்பு, கையை அசைக்க முடியாத அளவிற்கு முடத்தன்மைக்கு ஆளாகியுள்ளார். வேலை செய்ய முடியாத நிலைக்கு ஆளாகிய அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ஆயுள் முழுக்க வாழ்வாதார பாதுகாப்புக்காக 71 லட்சம் வெள்ளி இழப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கப்படுவதாக நீதிபதி ஜரீஃபா ஜைனல் ஆபிதீன் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி 12 வயதான சரண்யா, தனது தந்தை என். மகேந்திரனின் மோட்டார் சைக்கிளிலில் பள்ளியிலிருந்து திரும்பும் போது விபத்துக்குள்ளானார்.
இந்த விபத்து கபார், பெர்சியரன் ஹம்சா அலங்-கில் நிகழ்ந்தது. இதில் சரண்யாவின் இடது கை, லோரியின் சக்கரத்தில் சிக்கி, கடும் விளைவை ஏற்படுத்தியது.