கோலாலம்பூர், ஜூலை 31-
முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றின் இயக்குநர் வாரிய உறுப்பினர் ஒருவர் டத்தோஸ்ரீ விருதை தனது பெயருக்கு முன்னால் பயன்படுத்தி வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் விசாரணை செய்து வருகிறது.
போலி டத்தோஸ்ரீ விருதை தனது பெயருக்கு முன் அடைமொழியாக பயன்படுத்தி வரும் அந்த இயக்குநர் வாரிய உறுப்பினர் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் வர்த்தக குற்றத்தடுப்பு பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் தெரிவித்துள்ளார்.
சட்டப்பூர்வ அல்லாத விருதுகளை பயன்படுத்தி, விருதின் மாண்பிற்கு இழுக்கு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.