கோலாலம்பூர், ஜூலை 31-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் மிக சர்வாதிகாரப் போக்கை கையாளுகிறது என்று Bersih முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டில் தங்களுக்கு உடன்பாடுயில்லை என்று Bersih-வின் நடப்பத் தலைவர் முஹம்மது பைசல் அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார்.
பெர்சேவிற்கு தலைமையேற்றுள்ள தலைவர் என்ற முறையில் அம்பிகாவின் அந்த குற்றச்சாட்டை தாம் முற்றாக மறுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் பெர்சேவின் முன்னாள் தலைவர் என்ற முறையில் அம்பிகாவின் ஏமாற்றத்தையும்,எதிர்பார்ப்பையும் தம்மால் புரிந்து கொள்ள முடிகிறது, குறிப்பாக மக்களின் உரிமைக்காக தொடங்கப்பட்ட பெர்சேவின் பிரதான நோக்கம் சீர்திருத்தமாகும்.
அந்த சீர்திருத்தத்தை பக்காத்தான் ஹராப்பானால் நிறைவேற்ற முடியும் என்று பொதுத்தேர்தலுக்கு முன்பு அது அளித்திருந்த வாக்குறுதியின் அடிப்படையில் அம்பிகா தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருப்பதாக முஹம்மது பைசல் குறிப்பிட்டார்.