வாரிசுதாரர்களால் கோரப்படாமல் / அமனா ராயா- கிடப்பில் 50 கோடி வெள்ளி

புத்ராஜெயா, ஜூலை 31-

அமானா ராயா பெர்ஹாட் எனப்படும் பொது சொத்துக்களை பராமரித்து வரும் அரசாங்க ஏஜென்சியில் வாரிசுதாரர்களால் கோரப்படாமல் 50 கோடி வெள்ளி கிடப்பில் கிடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பணத்திற்கு சொந்தமானவர்கள் அல்லது அவர்களின் வாரிசுதாரர்கள், கிடப்பில் இருக்கும் தங்களுக்கு உரிமையான சட்டப்பூர்வமான பணத்தை கோருவதற்கு ஏதுவாக தேசிய பதிவு இலாகாவான JPN மற்றும் சமுதாயத் தலைவர்களின் உதவியுடன் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அதன் தலைவர் டான் ஸ்ரீ இட்ரஸ் ஹாருன் தெரிவித்தார்.

தங்களின் பூர்வீகச் சொத்துக்ளை கோருவதில் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் நீடித்து வரும் பாகப்பிரிவினைப் பிரச்னை, இறந்தவர்களுக்கு, சொத்துக்கள் அல்லது நிதி வளங்கள் இருக்கும் விவரத்தை குடும்ப உறுப்பினர்கள் அறிந்திடாதது போன்ற காரணங்களினால் 50 கோடி வெள்ளி பணம், அந்த அரசாங்க பொது பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து கோரப்படாமல் உள்ளது என்று இட்ரஸ் ஹாருன் தெளிவுபடுத்தினார்.

சரியான வாரிசுதார்களுக்கு அவர்களின் சொத்துக்கள் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக அமானா ராயா பெர்ஹாட் , நீண்ட காலமாகவே அந்த சொத்துக்களை பராமரித்து வருவதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS