இஸ்ரேல்: இறந்த ராணுவ வீரர்களின் விந்தணுக்கள் சேகரிப்படுவது ஏன்? இறந்த உடலில் விந்தணுக்கள் எவ்வளவு நேரம் உயிர்வாழும்?

இஸ்ரேல், ஆகஸ்ட் 01-

இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றிய தங்களது மகன்களை இழந்த பெற்றோர், இறந்தவர்களின் உடல்களில் இருந்து விந்தணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டு, அவை உறையவைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

அக்டோபர் 7ஆம் தேதி நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதல்களைத் தொடர்ந்து இதற்கான நடைமுறையில் சில விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால் விந்தணுக்களைப் பெற்று அவற்றை உறைய வைக்க தாங்கள் எதிர்கொள்ளும் நீண்ட சட்ட நடைமுறைகளால் கோபமும் விரக்தியும் அடைந்துள்ளதாக இறந்த இஸ்ரேலிய வீரர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

காஸா பகுதியில், 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி நடந்த போரில் தனது 20 வயது மகன் ரீஃப் கொல்லப்பட்டதை அறிந்த தருணத்தை நினைவுகூரும் போது அவி ஹருஷின் குரல் நடுங்குகிறது.

அன்று, அவரது வீட்டு வாசலுக்கு வந்த இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் அவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தனர். “ரீஃபின் விந்தணுவை மீட்டெடுக்க இன்னும் அவகாசம் இருக்கிறது, உங்களுக்கு அதில் சம்மதமா?”.

அவி ஹருஷ் உடனடியாக “ஆம்” என்று பதில் அளித்தார்.

WATCH OUR LATEST NEWS