சபா, ஆகஸ்ட் 01-
சபா, பிடாஸ், கம்போங் பிளாக் 5 எனுமிடத்திலுள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலையில் நிகழ்ந்த தீ விபத்தில், தந்தை, மகள் உள்பட மூவர் தீயில் கருகி மாண்ட வேளை, மூவர் காயங்களுக்கு இலக்காகினர்.
அதிகாலை மணி 2.19 அளவில் அவசர அழைப்பை பெற்ற பிறகு, கோத்தா மருது தீயணைப்பு மீட்பு படையினர் நிகழ்விடத்தை வந்தடைந்த போது, சம்பந்தப்பட்ட வீடு முற்றிலும் தீக்கிரையாகியிருந்தது.
பின்னர், வீட்டின் வரவேற்பரை, சமையலறை, குளியலறை ஆகியவற்றில் உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்ட அம்மூவரது சடலங்களும் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டன.
இரு வாகனங்கள் சேதமடைந்த வேளை, தீ ஏற்பட்டதற்கான காரணம் ஆராயப்படுகின்றது.