கோத்தா மருது, ஆகஸ்ட் 01-
தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இயக்குநர் வாரிய உறுப்பினர் ஒருவர் டத்தோ ஸ்ரீ பட்டத்தை போலியாக பயன்படுத்திவருவது தொடர்பில்,பஹாங் அரண்மனையிடமிருந்து புகார் பெறப்பட்டுள்ளதை, போலீஸ் உறுதிபடுத்தியுள்ளது.
அது தொடர்பில், தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய பஹாங் போலீஸ் தலைவர் டத்தூஸ்ரீ யஹாயா ஓத்மான், சில நபர்களிடம் விளக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
சம்பந்தப்பட்ட நபர் டத்தூஸ்ரீ பட்டத்தை போலியாக பயன்படுத்துவது தொடர்பில், கடந்த மாதம் 26ஆம் தேதி, போலீசில் புகாரளிக்கப்பட்டிருந்ததை, பஹாங் இளவரசரின் தனிப்பட்ட செயலாளர் அமீர் சஃபிக் ஹம்சா இதற்கு முன்பு உறுதிபடுத்தியிருந்தார்.