வாகன திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூவர் கைது

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 01-

பேராக், ஈப்போ-வில், நேற்று அதிகாலை மணி 4 அளவில், போலீசின் சோதணைக்கு பயந்து அபாயகரமாக வாகனத்தை செலுத்தி தப்பிக்க முயன்ற ஆடவர்களை, போலீஸ் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரையில் துரத்தி பிடித்துள்ளது.

வாகன திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் அம்மூவரும் TOYOTA HARRIER வாகனத்தில், ஈப்போ -விலுள்ள ஜாலான் மேடன் சூன் சூன் 1-இலிருந்துபத்து கஜா, ஜாலான் சிபுதே முச்சந்தி வரையில், தப்பித்தோட முற்பட்டதோடு, டோல் கட்டண சாவடியின் கேட்டையும் போலீஸ் வாகனத்தையும் மோதி சென்றுள்ளனர்.

பின்னர், அவர்களது வாகனத்தை நோக்கி, 3 முறை சுட்ட போலீஸ், பத்து கஜா ரோந்து போலீசின் உதவியுடன் 34 முதல் 47 வயதுக்கு உட்பட்ட அம்மூவரையும் கைது செய்தது.

WATCH OUR LATEST NEWS