ரெம்பியா சட்டமன்ற உறுப்பினர் மீது சட்டநடவடிக்கையை எடுக்கும் அம்னோ

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 02

ரெம்பியா சட்டமன்ற உறுப்பினர் மீது சட்டநடவடிக்கையை எடுக்கும் அம்னோ சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முஹம்மது ஜெய்லானி காமிஸ், அம்னோ கட்சியிலிருந்து விலகி பாஸ் கட்சியில் இணைந்துள்ளதாக கூறப்படும் விவகாரம்.

அது தொடர்பில், ஜெய்லானி-யிடம் 100 மில்லியன் வெள்ளி இழப்பீட்டை அம்னோ கோரவுள்ளதாக அதன் பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் அசிராஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்தார்.

அம்னோ-வுடன் செய்திருந்த உடன்படிக்கையை மீறி ஜெய்லானி,பாஸ் கட்சியில் இணைந்துள்ளார். கட்சிக்கு துரோகமிழைத்ததற்காக, அவர் மீது சட்டநடவடிக்கையை எடுக்கும் முடிவு நேற்றிரவு நடைபெற்ற உச்சமன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக,அசிராஃப் கூறினார்.

கடந்த மாதம் 16ஆம் தேதி, நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், ஜெய்லானி தங்கள் கட்சியில் இணைந்திருப்பதாக, பாஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

WATCH OUR LATEST NEWS