பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 01-
கெளந்தன், நெங்கிரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், எந்தவொரு தரப்பினரும் மேம்பாட்டு திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு, அங்குள்ள வாக்காளர்களைக் கவர முடியாது.
அங்குள்ள வாக்காளர்கள், இஸ்லாம், மலாய் ஆகிய உணர்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிப்பதாக, மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் – UITM-ம்மைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் டாக்டர் அரிஃப் அய்சுடின் அஸ்லான் தெரிவித்தார்.
நடப்பு சூழலில், இஸ்லாம் மற்றும் மலாய் சார்ந்த கருத்தியலை பாஸ்-சும் பெர்சத்து-வும் அதிகம் கொண்டுள்ளன.
ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தேசிய முன்னணி, இஸ்லாம் மற்றும் மலாய்க்காரர்களுக்காக போராடும் கட்சியாக, தங்களை காட்டிக்கொண்டால் மட்டுமே, நெங்கிரி தொகுதி வாக்காளர்களின் ஆதரவைப் பெற முடியும் என அரிஃப் கூறினார்.