பயிற்சிக்கு அனுப்பியது குறித்து இப்போது வருந்துகிறேன்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 01-

அரச மலேசிய கடற்படை அதிகாரி பயிற்சிக்கு தனது மகனை அனுப்பி வைப்பதற்கு எடுத்த முடிவு குறித்து தற்போது வருந்துவதாக மரணம் அடைந்த ஜோ.சூசைமாணிக்கத்தின் தந்தை ஜோசப் சின்னப்பன் தெரிவித்தார்.

அரச மலேசிய கடற்படை பயிற்சி சேர்வதற்கு முன்னதாக தமது மகன் சூசை மாணிக்கத்திற்கு உடல் ரீதியாக நடத்தப்பட்ட சோதனையில் அவர் திடகாத்திரமாக இருந்ததாக தந்தை ஜோசப் குறிப்பிட்டார்.

இப்போது வருத்தப்படுகிறேன் எதற்காக கடற்படை பயிற்சிக்கு அனுப்பினேன் என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் 72 வயதான ஜோசப் குறிப்பிட்டார்.

27 வயதுடைய தனது மகனின் இறப்புக்கு காரணமானவர்கள் என்று சந்தேகிக்கப்படும் அவைருக்கும் எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, இன்று காலையில் பெட்டாலிங் ஜெயா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தப்பின்னர் ஜோசப் இதனை தெரிவித்தார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு லுமூட் கேடி சுல்தான் இட்ரிஸ் கடற்படை தளத்தில் நுரையீரல் வீக்கம் காரணமாக சூசை மாணிக்கம் இறந்ததாக கூறப்படும் சம்பவம் ஒரு கொலையாகும் என்று மூன்று தினங்களுக்கு முன்பு ஈப்போ உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து ஜோசப், இப்போலீஸ் புகாரை செய்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS