மக்களுக்கு மிகச்சிறந்த சேவையை வழங்கக்கூடிய கட்சி பாஸ்

ஜெம்போல், ஆகஸ்ட் 01-

தற்போதைக்கு மக்களுக்கு மிகச்சிறந்த சேவையை வழங்கக்கூடிய கட்சி, பாஸ் கட்சியாகும் என்று மஇகாவின் நெகிரி செம்பிலான் முன்னாள் தொடர்புக்குழுத் தலைவர் டத்தோ கே எல். மாணிக்கம் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு நல்லதொரு சேவையை வழங்கக்கூடிய கட்சியாக பாஸ் திகழ்வதால் அந்த கட்சியின் ஆதரவு மன்றத்தின் மூலமாக உறுப்பினராக இருப்பதாக முன்னாள் ஜெரம் படங் சட்டமன்ற உறுப்பினரான எல். மாணிக்கம் குறிப்பிட்டார்.

பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் தலைமைத்துவத்தில் தாம் கவரப்பட்டு இருப்பதாகவும் மாணிக்கம் தெரிவித்தார்.

ஹிஜ்ரா என்று சொல்லக்கூடிய இடப் பெயர்ச்சிக்கு பின்னால் தான் ஞானம் பிறக்கிறது என்பார்கள்.. அந்த வகையில் பாஸ் கட்சியில் தாம் உறுப்பிராக சேர்ந்தது மூலம் ராக்கெட்டை பயன்படுத்தாமலேயே நிலவில் இடம் பெயர்ந்து விட்டதாக மாணிக்கம் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS