கோலாலம்பூர், ஆகஸ்ட் 01-
வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழம கோலாலம்பூரில் பாலஸ்தீன ஒற்றுமை பேரணியை அரசாங்கம் நடத்தவிருப்பதாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவித்துள்ளார்.
புத்ராஜெயாவில் உள்ள தமது அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
இந்த ஒற்றுமை பேரணியில் கலந்து கொள்வதற்கு கட்சி வேறுபாடுகளின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேலவை உறுப்பினர்கள் மற்றும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படுவதாக ஃபஹ்மி குறிப்பிட்டார்.
இந்தப் பேரணி கோலாலம்பூர், புக்கிட் ஜலில் Axiata Arena அரங்கில் நடைபெறும் என்று அரசாங்கப் பேச்சாளரான ஃபஹ்மி தெரிவித்தார்.