அம்பாங், ஆகஸ்ட் 02-
பத்து வயது சிறுமியை பாலியல் பலாக்காரம் புரிந்ததாக கூறப்படும் மியன்மார் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பழைய இரும்புப்பொருட்களை சேகரிப்பவரான 35 வயது ஆடவர், பத்து வயது மியன்மார் சிறுமியிடம் நான்கு முறை தகாத செயலில் ஈடுபட்டதாக போலீஸ் புகார் செய்யப்பபட்டுள்ளது என்று அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
செராஸ் பாருவைச் சேர்ந்த அந்த மியன்மார் பிரஜை, கூடுதல் வகுப்பிற்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டு இருந்த அந்த சிறுமியிடம் பாலியல் வல்லுறவு கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட ஆடவரும், அந்த பத்து வயது சிறுமியும் காதலர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஏசிபி முகமது அசாம் தெரிவித்தார்.