விசாரணை அறிக்கையை மீண்டும் திறக்க அனுமதி

புத்ராஜெயா, ஆகஸ்ட்02 –

கடந்த 2009 ஆம் ஆண்டு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் காவலில் இருந்தபோது இறந்துபோன அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹாக் மரணம் தொடர்பாக விசாரணையை மீண்டும் தொடங்குவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புக்கொண்டுள்ளார் என்று வழக்கறிஞர் ராம் கர்பால் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த விவரத்தை தியோ பெங் ஹாக் – கின் குடும்பத்தினருக்கும் பிரதமர் தெரிவித்துள்ளார் என்று ராம் கர்ப்பால் குறிப்பிட்டார்.

தியோ பெங் ஹாக் மரணம் தொடர்பில் 3 SPRM அதிகாரிகள் மீது நேரடியாக குற்றம் சாட்டப்பட்டாலும், தியோ மரணத்தில் எவரும் இதுவரை குற்றவாளி ஆக்கப்படவில்லை.

தங்கள் மகன் மரணம் தொடர்பில் நீதியை எதிர்பார்த்து தியோவின் குடும்பத்தினர், கடந்த 15 ஆண்டு காலமாக போராடி வருகின்றனர். இந்நிலையில் அவரின் மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணையை தொடங்குவதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாக ராம் கர்ப்பால் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மரண விசாரணை நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடைபெறும் என்று பிரதமர் உறுதி அளித்து இருப்பதாக ராம் கர்ப்பால் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS