ஜார்ஜ் டவுன், ஆகஸ்ட் 02-
தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வரும் பினாங்கு இரண்டாவது துணை முதல்வர் ஜக்தீப் சிங் தியோ-வின் விடுமுறையை நீட்டிக்க மாநில அரசு தயாராக இருப்பதாக பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோவ் தெரிவித்துள்ளார்.
விடுப்புக் கேட்டு, ஜக்தீப் சிங் செய்து கொண்ட விண்ணப்பத்தில் விடுறை நாள் கடந்த ஜுலை 22 ஆம் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பூர்ண குணமாகுவதற்கு தமக்கு மேலும் விடுறை தேவை என்று ஜக்தீப் சிங் கருதுவாரேயானால் அது குறித்து பேசுவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக சௌ கோன் இயோவ் குறிப்பிட்டார்.
தமது கணுக்காலில் ஏற்பட்ட உபாதைக்கு, மருத்துமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனைக்கூறியதால் டத்தோக் கெராமட் சட்டமன்ற உறுப்பினரான ஜக்தீப் சிங்