செமினியில் கொள்ளை / 3 போலீஸ்காரர்கள் கைது

காஜாங், ஆகஸ்ட் 02-

செமென்யிஹ், கம்போங் பாசிர் செமென்யிஹ்,ஜாலான் சுங்கை பென்னிங்- கில் ஒரு வீட்டில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காலாட் பிரிவைச் சேர்ந்த மூன்று போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டதை அரச மலேசிய போலீஸ் படை உறுதிப்பபடுத்தியுள்ளது.

புதன்கிழமை பின்னிரவு 12.17 மணியளவில் நிகழ்ந்த இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் போலீசார் புகார் ஒன்றை பெற்றுள்னர். இந்த புகாரின் அடிப்படையில் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டத்தில் செராஸ், காலாட் பிரிவைச் சேர்ந்த இரண்டு ஆடவர்களை காஜாங் மாவட்ட போலீசார் கைது செய்ததாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.

32 மற்றும் 35 வயதுடைய அந்த இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டைத் தொடர்ந்து மேலும் ஒரு நபர் வளைத்துப் பிடிக்கப்பட்டார். மூவருக்கும் தடுப்புக்காவல் அனுமதி பெறப்பட்டுள்ளதாக டத்தோ உசேன் உமர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS