புரிந்துணர்வு இல்லையென்றால் வெளியேறலாம்

அலோர் செட்டார் , ஆகஸ்ட் 02-

பெரிக்காத்தான் நேஷனலில் ஓர் உறுப்புக் கட்சியாக விளங்கும் கெராக்கான், அக்கூட்டணியை விட்டு வெளியேறுவதற்கு கதவுகள் எப்போதும் திறந்தவாரே உள்ளது என்று கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி நோர் மிரட்டியுள்ளார்.

கெராக்கானுக்கு புரிந்துணர்வு இல்லையென்றால், ஓர் உறுப்புக்கட்சியாக அந்த கூட்டணியில் இருப்பது உபயோகமற்றதாகும். அக்கட்சி வெளியேறுவதை யாரும் தடை சொல்லப் போவதில்லை என்று பெரிக்காத்தான் நேஷனலின் தேர்தல் இயக்குநருமான சனூசி குறிப்பிட்டார்.

சீனப்பள்ளிகள், மதுபான நிறுவனத்திடமிருந்த நன்கொடைகளை பெறக்கூடாது என்று பாஸ் கட்சி விடுத்துள்ள கோரிக்கைக்கு நேர்மாறாக கெராக்கான் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அந்தப் பல்லின கட்சியை பாஸ் தலைவர்கள் தற்போது வறுத்து எடுக்கத்தொடங்கியுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS