பகாங் , ஆகஸ்ட் 02-
கேமரன்மலையில் பகாங் அரசு செயலக கழகத்திற்கு சொந்தமான 55 லட்சத்து 26 ஆயிரத்து 291 ஹெக்டர் நிலங்கள் சம்பந்தப்பட்ட விவசாய நிலப்பகுதிகளை பதிவு செய்யும் நடவடிக்கையை பகாங் அரசாங்கம் செயல்படுத்தியுள்ளதாக மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்ட்ட LPS எனப்படும் தற்காலிக குடியிருப்பு உரிமத்திற்கு பதிலாக பகாங் Corporation Sdn. Bhd. வாயிலாக அமல்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுககான வாடகைத் திட்டத்தின் மூலம் இந்த பதிவு நடவடிக்கை நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் வாயிலாக நிலத்தோட்டக்காரர்களின் விவர தரவுகளின் வாயிலாக 1,661 பேர் சம்பந்தப்பட்ட விவரங்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளதாக வான் ரோஸ்டி தெரிவித்தார்.