மலேசிய பூப்பந்து வீராங்கனைகளுக்கு பிரதமர் வாழ்த்து

கோலாலம்பூர், ஆகஸ்ட் 02-

பாரிஸ் ஒலிம்பிக் பூப்பந்து போட்டியில் சாதனைப்படைத்து வரும் தேசிய மகளிர் இணையரான பேர்லி டான் – எம்.தினா ஜோடியினருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

உலகத் தர வரிசையில் 12 ஆவது நிலையில் உள்ள பேர்லி டான் – எம்.தினா ஜோடியினர், தங்களின் அசத்தலான ஆட்டத்தின் மூலம் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS