பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 02-
2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் பூப்பந்து போட்டியில் தேசிய மகளிர் இணையரான பேர்லி டான் – எம்.தினா ஜோடியினர், தென் கொரியாவைச் சேர்ந்த கிம் சோ யோங் – காங் ஹீ யோங் ஜோடியினரை இரு நேரடி செட்களில் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளனர்.
இதன் மூலம் அவர்கள் ஒலிம்பிக் பூப்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி, வரலாறு படைத்துள்ளனர். ஒலிம்பிக் விளையாட்டு அரங்கில் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் மலேசியாவின் முதலாவது மகளிர் இணையராக பேர்லி டான் மற்றும் எம்.தினா விளங்குகின்றனர்.
.
முதல் செட்டில் 21-12 என்று ஆட்டத்தை வெற்றிக்கொண்டபேர்லி டான் – எம்.தினா ஜோடியினர், இரண்டாம் செட்டில் 21-13 என்ற புள்ளிகளில் வெற்றிப்பெற்றனர்.
ஒலிம்பிக் போட்டியில் மலேசியப் பூப்பந்து மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டக்காரர்களின் அபார ஆட்டம் மலேசியர்களை உற்சாகமடைய செய்துள்ளது