கோலாலம்பூர், ஆகஸ்ட் 02-
தன்னார்வ அடிப்படையில் சிங்கப்பூரிலிருந்து ஆங்கிலப்பாட ஆசிரியர்களை மலேசியா தருவிப்பது மூலம் கல்வித்துறையில் உள்ளுர் பட்டதாரிகளை ஆசிரியர் பணிக்கு சேர்க்கும் திட்டமும், அவர்களுக்கான வேலை வாய்ப்பும் ஒரு போதும் பாதிக்காது என்று கல்வி அமைச்சு இன்று உத்தரவாதம் அளித்துள்ளது.
கடந்த ஜுன் மாதம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் .இப்ராஹிமிற்கும், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்- கிற்கும் இடையில் நடந்த கலந்துரையாடலின் வழி சிங்கப்பூலிருந்து ஆங்கிலப்பாட ஆசிரியர்களை தன்னார்வ அடிப்படையில் பணிக்கு எடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதனால் கல்வித்துறையில் இணைய விருக்கும் மலேசிய பட்டதாரிகள் பாதிக்கப்பட மாட்டார்கள். ஏனெனில் இந்த திட்டத்திற்கு சிங்கப்பூர் நிதி அளிக்கிறது என்று கல்வி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.