ஜார்ஜ் டவுன், ஆகஸ்ட் 02-
போலீசார் மேற்கொண்ட ஒபி தாபிஸ் காஸ் சோதனை நடவடிக்கையின் போது போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்க போலீஸ்காரர் ஒருவரை மோதித்தள்ளி விட்டு தப்பிச் சென்ற ஆடவர் ஒருவர் வளைத்துபிடிக்கப்பட்டார்.
இச்சம்பவம் புதன்கிழமை இரவு பினாங்கு, ஜார்ஜ் டவுன்,சுங்கை துவாவில் நிகழ்ந்தது. சுங்கை துவா, சுகாதார கிளினிக்கிற்கு முன்புறம் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆடவர் தேடப்பட்டு வந்தார்.
போதைப்பொருள் கடத்தல்காரர் என்று நம்பப்படும் 44 வயதுடைய அந்த நபர், உளவுத்தகவல் அடிப்படையில் ஆயர் ஈதம் -மில் கைது செய்யப்பட்டார் என்று திமுர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரஸ்லான் அப்துல் ஹமீத் தேரிவித்தார்.