புத்ராஜெயா,ஆகஸ்ட்02-
இடைநிலைப்பள்ளிகள் உட்பட உயர்கல்விக்கூடங்கள் சம்பந்தப்பட்ட போலி கல்விச் சான்றிதழ்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து உயர்கல்வி அமைச்சு போலீசில் புகார் செய்யவிருப்பதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.
போலி கல்விச்சான்றிதழ்களை விற்பனை செய்யும் கும்பல்களுடன் உயர்கல்விக்கழகம் எதுவும் தொடர்பு வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் ,அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜம்ரி அப்துல் காதிர் எச்சரித்துள்ளார்.
இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்மென்று அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்கும் , தனியார் உயர்கல்விக் கூடங்களுக்கும் அமைடச்சர் ஜம்ரி நினைவூட்டினார்.
இதுபோன்ற சட்டவிரோத செயல்பாடுகள் மக்களை குழப்பமடையச் செய்யும் என்பதுடன் கல்விக்கழகங்களின் நற்பெயருக்கு அது களங்த்தை ஏற்படுத்தி விடும் என்று ஜம்ரி சுட்டிக்காட்டினார்.