லஹாட் டத்து, ஆகஸ்ட் 02-
எட்டு மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் ,தாம் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் உள்ள வார்ட்டிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
இச்சம்பவம் , நேற்று காலையில் சபா, லஹாட் டத்து-வில் உள்ள மருத்துவமனையில் நிகழ்ந்தது. மன ந்லப்பாதிப்புக்கு ஆளாகியுள்ள அந்த 20 வயது பெண் , மிக மூர்க்கமாக நடந்து கொள்கிறார் என்று கூறி, குடும்ப உறுப்பினர்கள், கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள்.
வார்ட்டில் அனுமதிக்கப்பட்ட பின்னரும் அந்த கர்ப்பணிப் பெண் கூச்சலிட்டு, அட்டகாசம் புறிகிறார் என்று கூறி அவரை அமைதிப்படுத்தி, சாந்தப்படுத்துவதற்கான மருந்து மாத்திரைகள் இரவில் கொடுக்கப்பட்டுள்ளதுன.
ஆழ்ந்த நித்திரையில் இருந்த அந்தப் பெண், மறுநாள் காலையில் அவர் வார்ட்டில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளான மருத்துவ உதவியாளர்கள் தேடி இருக்கின்றனர்.
அவர் மருத்துவமனையின் கீழ் மாடியில் வெளிப்புற புற்தரையில் விழுந்து கிடப்பது தெரியவந்தது.குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்த அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது .
அந்த கர்பிணியின் எட்டு மாத குழந்தையை காப்பாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது எனினும் அறுவை சிகிச்சை பலனின்றி தாயும் சேயும் உயிரிழந்தனர் என்று லஹாட் டத்து மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி துல்பஹாரின் இஸ்மாயில் தெரிவித்தார்.