பத்து நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 02-

இலக்கவியல் நிறுவனங்களுக்கான 10 crypto ( கிரிப்டோ) நட்பு இடங்களின் பட்டியில் மலேசியா உள்ளது என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தேரிவித்துள்ளார்.

அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்துவதற்கான செலவு போட்டித் தன்மையுடன் இருப்பதால் , நாட்டின் பணியாளர்கள் தனித்துவத்தால் உந்தப்பட்டுள்ளனர் என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.

பல்வேறு மொழிகளில் தெர்ச்சி பெரும் மலேசியர்களின் திறன், வாடிக்கைடயாளர்களுக்கு பயனுள்ள சேவையை வழங்க உலகளாவிய நாடுகளுக்கு பயனுள்ள சேவையை வழங்க உலகளாவிய நாடுகளுக்கு உதவுகிறது .

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் , மொத்தம் 193 நிறுவனங்களுக்கு ” இலக்கவியல் மலேசியா” அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அவற்றில் பிளாக்செயின்,இணையம் 3, செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் அடங்கும் என்று அமைச்சர் கோபிந்த் சிங் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS