குவாந்தன், ஆகஸ்ட் 02-
கேமரன்மலை விவசாய நிலப் பகுதிகளை அவற்றின் உரிமயாளார்கள், அந்நிய நாட்டவர்களுக்கு வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடப்படுவது கண்டு பிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பகாங் மாநில அரசு எச்சரித்துள்ளது.
தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலத்தை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள பொதுப்பற்ற நில உரிமையாளர்களின் செயலினால் பலதரப்பட்ட பிரச்சனைகள் உருவெடுப்பதாக பகாங் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
இதன் தொடர்பிலே கேமரன்மலையில் 78 தொகுதிகளை கொண்ட 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஹெக்டர் பரப்பளலான் விவசாய நிலப்பகுதிகளை மறுபதிவு செய்யும் நடவடிக்கையை பகாங் மாநில அரசு ஈடுபட்டுள்ளதாக மந்திரிபெசார் வான் ரோஸ்டி குறிப்பிட்டார்