ட்ரெலர் ஒன்று மற்றொரு லாரியை மோதி விபத்து

சிலாங்கூர், ஆகஸ்ட் 02-

சிலாங்கூர், கோலா சிலாங்கூர்- கோலாலம்பூர் சாலையின் 16-வது கிலோமீட்டரில், ட்ரெலர் ஒன்று மற்றொரு லாரியை மோதி விபத்துக்குள்ளானதில், 40 வயதான ட்ரெலர் ஓட்டுநர் கை கால்களில் காயங்களோடு நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

Ijok-கில் இருந்து கோலா சிலாங்கூர் -ஐ நோக்கி சென்று கொண்டிருந்த ட்ரெலர் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறினால் சமிஞ்சை விளக்கில் நிற்க இயலாமல் மற்றொரு லாரியின் பின் புறத்தில் மோதியிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவ்விபத்து தொடர்பாக காலை மணி 9.35-க்கு தகவல் அறிந்து நிகழ்விடம் விரைந்த கோலா சிலாங்கூர் போலிஸ் அதிகாரிகள் விபத்துக்குள்ளான ட்ரெலர்-இன் தலைப்பபகுதி முற்றிலும் சேதமுற்று இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS