15.75 கிலோகிராம் எடைக்கொண்ட methamphetamine வகை போதைப்பொருள்களை விநியோகித்த குற்றச்சாட்டு தொடர்பாக, இன்று செபாங் செக்ஸ்யென் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 19 வயது இளைஞர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், அந்த ஆடவர் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டு புரிந்ததாக மட்டும் தலையத்தார்.
இருப்பினும், அந்த ஆடவரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த ஜூலை 19-ஆம் தேதி இரவு 9.24 மணியளவில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் Terminal 2-இன் இரண்டாவது மாடியில் உள்ள போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு அலுவலகம் அருகே அவர் அக்குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இரசாயண அறிக்கை முடிவுக்காக, அவ்வழக்கின் மறுசெவிமடுப்பு நவம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.