ஜோகூர், ஆகஸ்ட் 02-
ஜோகூர், மாக்கோத்தா சட்டமன்ற உறுப்பினர் ஷரீபா அசிசா சையத் ஜைன் காலமானார். அவருக்கு வயது 63. அந்த பெண் சட்டமன்ற உறுப்பினர் காலமானதை ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காஜி உறுதிபடுத்தியுள்ளார்.
உடலுக்குள் ஏற்பட்ட ரத்தக் கசிவுக்காக ஜோகூர், என்சே’ ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மிக கவலைக்கிடமாக இருந்து வந்த ஷரீபா அசிசா, சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் பிரிந்தது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மாக்கோத்தா தொகுதியில் அம்னோ சார்பில் போட்டியிட்ட ஷரீபா அசிசா மகத்தான வெற்றி பெற்றார். இதற்கு முன்பு அவர் 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் பெனாவர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.
அவரின் நல்லுடல், குளுவாங், ஜாலான் அஹ்மத் கான்- னில் உள்ள அவரின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு தொழுகைக்குப் பின்னர் குளுவாங், கம்போங் மேலாயு முஸ்லீம் மையத்து கொல்லையில் அடக்கம் செய்யப்படவிருக்கிறது.