நீரிழிவு நோயாளிகள் அதிகமான நாடு மலேசியா

புத்ராஜெயா,ஆகஸ்ட் 02-

தென்கிழக்காசியாவில் அதிகமான நீரிழிவு நோயாளிகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் மலேசியாவும் தொடர்ந்து இடம் பெற்று வருவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் டுல்கேப்ளி அஹ்மட் தெரிவித்தார்.

ஆறு மலேசியர்களில் ஒருவர் வீதம் நீரிழிவு நோய்க்கு ஆளாகியுள்ளார். அண்மையில் தேசிய உடல்நலம் மற்றும் நோயற்றவர்கள் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மலேசியர்களில் பெரும்பாலோர் உடல் பருமன் பிரச்னையை எதிர்நோக்கியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுளளதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசிய மக்கள் தொகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 50.1 விழுக்காட்டினாராக இருந்த உடல் பருமன் கொண்ட மக்களின் எண்ணிக்கை, 2023 ஆம் ஆண்டு 54.5 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்று டாக்டர் டுல்கேப்ளி அஹ்மட் குறிப்பிட்டார்.

சக்கரைக்கு எதிரான யுத்தம் என்ற பிரச்சாரத்தை தொடங்குவது மூலமே நடப்பு சிக்கலை தவிர்க்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS