இரு கல்வி அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச குற்றச்சாட்டு

மலாக்கா, ஆகஸ்ட் 02-

குத்தகையாளர் ஒருவர் தொடர்ந்து உபகரணங்களை விநியோகம் செய்வதற்கு அனுமதி அளிக்கும் வகையில் அவரிடமிருந்த 27 ஆயிரத்து 100 வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக மலாக்கா மாநில கல்வி இலாகாவை சேர்ந்த இரு பெண் அதிகாரிகள், ஆயர் கெரோஹ் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

48 வயது யுஸ்மாவதி யூசோஃப் மற்றும் 61 வயது ரோஸ்னி லெமன் என்ற அந்த இரு பெண் அதிகாரிகள், நீதிபதி எலசபெத் பய வான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

அவ்விரு கல்வி அதிகாரிகளும் Syarikat Pusat Pengiklanan Prisma என்ற நிறுவனத்தின் நிர்வாகி ஓங் ஆ சியோங்- கிடமிருந்து கட்டம் கட்டமாக லஞ்சத் தொகையை பெற்றதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இரு அதிகாரிகளும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதால் அவர்களை ஒரு நபர் உத்தரவாதத்துடன் தலா 10 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

WATCH OUR LATEST NEWS